நாடு முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை வேக வேகமாக பரவி வந்த நிலையில் தொடர்ச்சியாகமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக நோயின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனால் ஒருசில மாநிலங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் நாட்டில் ஒரு சில பகுதிகளில் மட்டும் கொரோனா கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து உள்ளதாக சுகாதாரத் அமைச்சகம் கவலைதரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையடுத்து கொரோனா அதிகம் பரவினால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக மழைக்காலங்களில் தொற்று பரவாமல் இருக்க அவசியத் தேவையின்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.