Categories
மாநில செய்திகள்

மீண்டும் எகிறி அடிக்கும் தக்காளி விலை…. புலம்பும் இல்லத்தரசிகள்…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், காய்கறி வரத்து குறைந்து காய்கறி விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தக்காளி விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு கிலோ 150 வரை விற்பனை செய்யப்பட்டது. படிப்படியாக விலை குறையத் தொடங்கி ஒரு கிலோ 55 முதல் 70 வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதற்கிடையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட், மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் தக்காளி விலை மீண்டும் ரூ. 100க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை கோயம்பேட்டில்  தக்காளி சில்லரை விலையில் 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மீண்டும் இல்லத்தரசிகள் தக்காளி இல்லாமல் சமைக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

Categories

Tech |