உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது.
இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. பழையபடி கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுமாறும் கொரோனா உறுதியானவர்களின் மரபணுவை சோதனைக்கு உட்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம் மக்கள் அனைவரும் முகக் கவசம் அடைந்து சமூக இடைவேளையை கடைபிடிக்க வேண்டும் எனவும் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயம் எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்று மூன்று பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் மீண்டும் ஒரே நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 201 ஆக பதிவாகி இருந்த நிலையில் இன்று பாதிப்பு 227 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 3424 ஆக உயர்ந்துள்ளது.