சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு நகரம் முழுவதும் ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே பரிசோதனை செய்த மக்கள் அனைவரும் மீண்டும் ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அரசு வலியுறுத்தியுள்ளது.
அதோடு நகரம் முழுவதும் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு அறிவிப்பு தொடரும் எனவும் மறு அறிவிப்பு வரும் வரை மக்கள் யாரும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் அறிகுறிகளுடன் கூடிய தொற்று பாதிப்பு 768 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.