மேற்கு வங்க மாநிலம் போல்பூரில் பழங்குடியின சிறுமி கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். சிறுமியை வியாழக்கிழமை ஐந்து பேர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.
கன்கலிதலாவில் நடந்த கண்காட்சிக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை 5 பேர் கும்பல் கடத்திச் சென்று அருகில் உள்ள வயலில் வைத்து பலாத்காரம் செய்ததாக பாதிகப்பட்ட சிறுமியின் சகோதரி புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்வோம் என்றும் கூறியுள்ளனர்.
நாடியா மாவட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி இறந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.