Categories
உலக செய்திகள்

மீண்டும் ஒரு தடுப்பூசியா?… ரஷ்யாவின் அசத்தல் கண்டுபிடிப்பு…!!!

ரஷ்யா தயாரித்துள்ள மேலும் ஒரு கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியை கண்டறிந்து பதிவு செய்துவிட்டதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருந்தார். ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்துடன், கமலேயா தொற்று நோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து தயாரித்த அந்த தடுப்பூசிக்கு ‘ஸ்புட்னிக் 5’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

அது விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ரஷ்யா மேலும் ஒரு தடுப்பூசியை கண்டறிந்து, பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளது.இந்தத் தடுப்பூசியை வெக்டர் இன்ஸ்டிடியூட் என அழைக்கப்படுகின்ற ரஷ்ய அரசின் வைரலாஜி மற்றும் உயிர் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்துள்ளது. அதனை தேசிய சுகாதார கண்காணிப்பு அமைப்பு மற்றும் ரோஸ்போடிரெப்நட்சார் கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த தடுப்பூசி முதல் கட்டமாக 14 பேருக்கு செலுத்தி சோதிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக 43 பேருக்கு போட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட அனைவரும் நலமாக இருப்பதாக ரோஸ்போடிரெப்நட்சார் கூறியுள்ளது. அதன் மருத்துவ பரிசோதனைகள் அடுத்த மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Categories

Tech |