உத்தரப்பிரதேசம் காஸியாபாத் மாவட்டத்தில் உள்ள மோடிநகர் பகுதியில் உமேஷ் சர்மா என்பவர் வசித்து வந்துள்ளார். அவருடைய வீட்டில் ஆராய்ச்சி மாணவரான அன்கித் கோகார் என்பவர் தங்கி பயின்று வந்துள்ளார். அவர் லெக்னெள பல்கலைக்கழகத்தில் பி.எச்டி பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் அன்கித்தின் பெற்றோர் சென்ற சில மாதங்களுக்கு முன் இறந்துள்ளனர். இதையடுத்து பாக்பாத் பகுதியிலிருந்த அவர்களின் பூர்விகசொத்தை அன்கித் விற்பனை செய்துள்ளார்.
இதன் வாயிலாக ரூ.1 கோடி கிடைத்துள்ளது. அதன்பின் பெற்றோர் துணை இன்றி தனியொருவராக பயின்று வரும் அன்கித்தை, அவரின் வீட்டு உரிமையாளர் பணத்துக்கு ஆசைப்பட்டு கொலை செய்யத் திட்டமிட்டு உள்ளார். அந்த வகையில் அன்கித்தை கழுத்தை நெறித்து கொலை செய்து உடலை 3 பாகங்களாக வெட்டி மூன்று இடங்களிலுள்ள கால்வாயில் வீசியுள்ளார். சென்ற அக்டோபர் 6ம் தேதி இந்த சம்பவம் அரேங்கேறியுள்ளது.
அன்கித்திடம் இருந்து பல நாட்களாக எந்தவொரு பதிலும் வராததால், அவரின் நண்பர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி காவல்துறையினர் வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தியதில் உண்மைகளை கண்டறிந்துள்ளனர். மேலும் வீட்டு உரிமையாளர் மற்றும் அவரது நண்பரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அன்கித்தின் ஏடிஎம் அட்டையில் இருந்து வீட்டு உரிமையாளர் ரூ.20 லட்சம் பணத்தை எடுத்துள்ளார்.
அத்துடன் அன்கித்தின் ஏடிஎம் அட்டையை வீட்டு உரிமையாளர் தன் நண்பரிடன் கொடுத்து மீத பணத்தை ஏடிஎம்மிலிருந்து எடுக்கும்படி தெரிவித்துள்ளார். தில்லியில் உடன் தங்கியிருந்த காதலி ஷ்ரத்தாவை, காதலனே கொன்று உடலை 33 பாகங்களாக வெட்டி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதேபோல் உத்தரப்பிரதேசத்திலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.