தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 162 இடங்கள் வரை வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று எண்ணி ABP மற்றும் சி – வோட்டர் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கவுள்ள 5 மாநிலங்களில் ABP மற்றும் சி- வோட்டார் நிறுவனங்கள் இணைந்து தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை மேற்கொண்டுள்ளனர். இதன் முடிவில் தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி 154 முதல் 162 இடங்கள் வரை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 41 சதவீத ஓட்டுகள் இந்தக் கூட்டணிக்கு கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
.அதிமுக – பாஜக கூட்டணிக்கு 58இலிருந்து 66இடங்கள் வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவை பொருத்தவரை ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மொத்தமுள்ள 140 இடங்களில் 81 முதல் 90 தொகுதிகளில் ஆளும் LDF கூட்டணி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 47 முதல் 55 இடங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பாரதிய ஜனதாவுக்கு அதிகபட்சம் 2 தொகுதிகள் கிடைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தை பொருத்தவரை மம்தா பானர்ஜி ஆட்சியை தக்க வைப்பார் என்று கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளது. அவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 164 இடங்களை கைப்பற்றும் என்றும், 92 முதல் 108 தொகுதிகளுடன் இரண்டாமிடத்தை பாஜக பிடிக்க வாக்களிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு மேற்கு வங்கத்தில் 39 தொகுதிகள் வரை மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸாம் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்கும் பாஜக முதல் முறையாக புதுச்சேரியிலும் 17 முதல் 21 தொகுதிகளுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக ABP மற்றும் சி – வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.