இளம் நடிகையான நிதி அகர்வால் சிம்புவின் வீட்டில் அவருடன் ஒன்றாக தங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்புவுக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் என அடுத்தடுத்து பல படங்களில் சிம்பு நடித்து வருகிறார். 38 வயதான நடிகர் சிம்புவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இருப்பினும் பல்வேறு நடிகைகளுடன் சிம்பு காதல் சர்ச்சையில் சிக்கி வருகிறார் . ஏற்கனவே நயன்தாரா, ஹன்சிகா ஆகியோரை சிம்பு காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் சில காரணங்களால் அந்த காதல்கள் தோல்வியிடைந்தன.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு காதல் சர்ச்சையில் நடிகர் சிம்பு சிக்கியுள்ளார். அதாவது சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த நடிகை நிதி அகர்வாலை சிம்பு காதலிப்பதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு இடையிலான நெருக்கம் அதிகரித்த நிலையில் நிதி அகர்வால் சிம்புவின் வீட்டிலேயே தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. நிதி அகர்வால் ஏற்கனவே முன்பு கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுலை காதலித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.