தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷார். இவர் தனக்கு என்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். இவர் கதாநாயகனாக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், அரசியல் என பன்முகங்களை கொண்டவர். இவரும் வரலட்சுமி சரத்குமார் காதலித்தார்கள். ஆனால் அவர்கள் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காதல் முறிந்து விட்டது. இதனையடுத்து தெலுங்கு நடிகான அனிஷாவை விஷால் காதலித்து வந்தார். காதலை விட்டில் சொல்ல அவர்கள் பச்சைக் கொடி காட்டினார்கள். கடந்த 2019 ஆம் ஆண்டு விஷாலுக்கும் அனிஷாவுக்கும் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயம் முடிந்த ஆறு மாதத்தில் அவர்கள் பிரிந்து விட்டார்கள். திருமணம் நின்று போன பிறகு கெரியரில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
அதனை தொடர்ந்து வயது ஏறிக்கொண்டே போகிறது ஒரு கல்யாணம் பண்ணுங்க அண்ணா என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் விஷால் தெரிவிக்கும் விஷயம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. அதாவது அப்பா அம்மா பார்த்து செய்து வைக்க திருமணத்தில் நான் செட் ஆவேனா என தெரியவில்லை. உங்களிடம் ஏன் பொய் சொல்லணும் ஆமா நா லவ் பண்றேன் .அந்தப் பெண் யார் என்கிற கேள்விக்கு மட்டும் கொஞ்சம் பொறுத்து பதில் சொல்கிறேன் என்று கூறினார். மேலும் விஷாலின் காதலி யார்? என்பது அவரின் நண்பர்களான ரமணா, நந்தாவுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.