Categories
தேசிய செய்திகள்

மீண்டும் கியூட் தேர்வு ரத்து…. யுஜிசி வெளியிட்ட சூப்பர் தகவல்….. மகிழ்ச்சியில் மாணவர்கள்….!!!!

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளில் சேர்வதற்காக க்யூட் என்ற நுழைவு தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வை கடந்த ஜூலை 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டது. அதன்படி கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெற இருந்த முதல் கட்ட தேர்வின் போது தொழில்நுட்பக் குளறுபடிகள் காரணமாக பல்வேறு மையங்களை தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இரண்டாம் கட்ட கியூட் தேர்வு சில மையங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைப் போல மழை, நிலச்சரிவு பாதிப்புகள் காரணமாக கேரளம் இடாநகர் பகுதியில் இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்ட தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக முடிக்க வேண்டும் என்று டிஎன்ஏ திட்டமிட்ட நிலையில் தற்போது ஆகஸ்ட் 30-ம் தேதியில் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நான்காம் கட்ட தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பல மையங்கள் தேர்வு மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக டெல்லி குரு ஹர்கோபிநாத் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், டெல்லி ஜசோலா பகுதியில் அமைந்துள்ள ஆசிய பசிபிக் நிறுவனம், டெல்லி நங்கோலியில் உள்ள ஆகாஸ் சர்வதேச மேல்நிலைப்பள்ளி, பிதாம்புரா விவேகானந்தா தொழில் படிப்புகள் நிறுவனம் ஆகிய தேர்வு மையங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வு எழுதாமல் திருப்பி அனுப்பப்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் சில மாணவர்கள் இரண்டு மணி நேரம் தாமதமாக தேர்வு தொடங்கப்பட்டதாக புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கப்படும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. இது குறித்து யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியது, சில மையங்களில் மட்டும் சர்வர் பிரச்சினை காரணமாக தேர்வு செய்ய ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேர்வு எழுத மறு வாய்ப்பு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |