பிக்பாஸ் -4 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் டாஸ்க் மற்றும் வீட்டு வேலைகள் ஆகியவற்றில் சிறப்பாக மற்றும் மோசமாக செயல்படும் போட்டியாளர்களை தேர்வு செய்வது வழக்கம். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் ஆரி மோசமான போட்டியாளராக ரியோவை தேர்வு செய்கிறார் . இதன்பின் நடைபெற்ற வாக்குவாதத்தில் ஆரியிடம் ‘குருப்பிஸம்’ என்ற வார்த்தையை ஏன் சொன்னீர்கள் ? என்று ரியோ கேட்கிறார்.
#Day81 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/LWYjV3xnuh
— Vijay Television (@vijaytelevision) December 24, 2020
இதற்கு தனித்தன்மையோடு விளையாட வேண்டும் என்று விதிகளில் கூறப்பட்டிருப்பதாக ஆரி விளக்கமளித்தார் . பின்னர் ஆரி விதிமுறை புத்தகத்தை எடுத்து ‘கூட்டமாக சேர்ந்து விளையாடாதீர்கள் , தனித்தன்மையுடன் விளையாடுங்கள் என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது . கூட்டமாக விளையாடுவதற்கு ஆங்கிலத்தில் குரூப்பிஸம் என்று தான் அர்த்தம்’ என கூறுகிறார். நேற்றைய எபிசோடிலும் குரூப்பிஸம் குறித்து ஆரி மற்றும் ரியோ வாக்குவாதம் செய்தனர் . இதையடுத்து இறுதியில் யார் மோசமான போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டு ஓய்வறைக்கு அனுப்பப்பட்டார் என்பது இன்றைய எபிசோடில் தான் தெரியவரும்.