அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த வாரம் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். ஜோபைடனை டாக்டர்கள் குழு தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்தது. இதற்கிடையே அதிபர் ஜோபைடன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார் என அதிபரின் டாக் கெவின் ஒகானர் கூறியுள்ளார். இந்த சூலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு மீண்டும் கொரண பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ஜூலை 26 ஆம் தேதி செவ்வாய் அன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பின் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் ஜூலை 30-ஆம் தேதி நேற்று காலை மீண்டும் பரிசோதனை மேற்கொண்டார். அதில் மீண்டும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது என கூறப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார் என டாக்டர் குழு தெரிவித்து இருக்கின்றது.