கபசுர குடிநீரில் என்னென்ன மருத்துவ பொருட்கள் உள்ளது என்பதை குறித்து இதில்
தெரிந்து கொள்வோம்.
கொரோனா ஆரம்பித்ததிலிருந்து பல மருத்துவங்களை நாம் செய்தாலும் சிலர் கபசுர குடிநீர் குடிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். காய்ச்சல் வந்தாலே முதலில் நமக்கு எல்லா மருத்துவமனைகளிலும் இதை தருகின்றனர். அப்படி அதில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வோம்.
கடந்த வருடம் மார்ச் மாதம் உலக நாடுகளில் பலர் பரவிய கொரோனா தொற்று இன்னும் விடாமல் நம்மைத் துரத்திக் கொண்டு வருகிறது. சமீபத்தில் சற்றுக் குறைந்திருந்தது தொற்று தற்போது மீண்டும் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இதனால் நம்மை பாதுகாப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
இது கொரோனா வைரஸ்கான மருந்து இல்லை. நோயெதிர்ப்பு சக்தியை கொடுக்கும் குடிநீர். இது சளி இருந்தால் எளிதில் அகற்றி விடும். நுரையீரலிலுள்ள அணுக்களின் அளவை அதிகரிக்க மற்றும் எளிதில் சுவாசிக்க நல்ல பலனைக் கொடுக்கிறது.. காலையில் குடிக்கும் போது நல்ல பலன்தரும் சாப்பிட்ட பிறகு இதனை குடிக்கக்கூடாது. வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் உள்ள சளி குறையும். இது 15 வகையான மூலிகைகளால் இது தயாரிக்கப்படுகிறது.
அவை என்னென்ன என்றால்
1. ஆடாதொடை இலை, 2. சிறு தேக்கு, 3. கரிசலாங்கண்ணி, 4. சுக்கு, 5. திப்பிலி, 6. சிறுகாஞ்சேரி வேர், 7. அக்ரகாரம், 8. முள்ளி வேர், 9. கற்பூர வள்ளி இலை, 10. கோஷ்டம், 11. சீந்தில் தண்டு, 12. நிலவேம்பு சமூலம், 13. வட்ட திருப்பி வேர், 14. கோரைக்கிழங்கு, 15. கடுக்காய் தோல் ஆகிய மருத்துவகுணம் கொண்ட பொருட்களை கொண்டு இந்த கபசுரக் குடிநீர் தயாரிக்கப்படுகிறது.