நாடு முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் நோய்த்தொற்று பாதிப்பு டெல்லி மற்றும் மராட்டிய மாநிலங்களில் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கொரோனாவால் டெல்லியில் பள்ளி மாணவர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே மருத்துவ நிபுணர்கள், நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களை மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படாவிட்டாலும் பரவல் அதிகரித்து வருவது கவலைக்குரியது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கைவிட்டது தான் மீண்டும் நோய் பரவுவதற்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே சமூக விலகல், முக கவசம் அணிதல், வழக்கமான சுகாதார நெறிமுறைகளை கடைபிடித்தல், முழுமையான தடுப்பூசி எடுத்துக் கொள்ளுதல் ஆகியவற்றை முறையாக பின்பற்றுவதன் மூலம் நோய்த்தொற்றின் தீவிர சூழ்நிலையை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.