Categories
சினிமா தமிழ் சினிமா

“மீண்டும் சஞ்சய் ராமசாமி வருகிறாரா…?” கஜினி-2 உருவாக இருப்பதாக தகவல்….!!!!!

சூர்யா நடிப்பில் கஜினி 2 பாகம் உருவாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சூர்யா. இவர் தற்போது பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் நடிப்பில் சென்ற 2005 ஆம் வருடம் வெளியான திரைப்படம் கஜினி. இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தில் அசின், நயன்தாரா உள்ளிட்டோர் ஹீரோயினாக நடித்திருந்தார்கள்.

மேலும் இப்படம் இந்தியிலும் அமீர்கான் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. சூர்யா வாழ்க்கையில் முக்கிய படமான கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஏ.ஆர்.முருகதாஸ் எடுக்க திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகின்றது. மேலும் சூர்யாவும் இப்படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக சொல்லப்படுகின்றது. ஆகையால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |