Categories
சினிமா

மீண்டும் சிக்கலில் ஜெய்பீம்…. காப்புரிமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு…… வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். ஞானவேல் இயக்கத்தில் ‘ஜெய்பீம்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியாகியது. இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சென்னை சாஸ்திரி நகர் போலீசார் காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல், நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டைன்மெண்ட் மற்றும் பட குழுவினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த திரைப்படம் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நிலையில் காவல்துறை சித்திரவதையால் கொல்லப்பட்ட ராஜகண்ணுவின் உறவினரும் அந்த வழக்கின் பாதிக்கப்பட்டவருமான கொளஞ்சியப்பன் என்பவர் சென்னை சைதாப்பேட்டை கோட்டில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தங்களது வாழ்க்கை உண்மை சம்பவத்தை தங்கள் அனுமதி இல்லாமல் திரைப்படமாக்கியதாகவும் காப்புரிமை சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராஜாகண்ணுவின் உறவினர் கொளஞ்சியப்பன் கோட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரனையில் வருகின்ற 26 ஆம் தேதிக்குள் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாஸ்திரி நகர் காவல் நிலைய போலீசருக்கு சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. எனவே தற்போது வழக்கு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |