Categories
உலக செய்திகள்

மீண்டும் சிக்கலில் போப் பிரான்சிஸ்….! இப்படியா செய்யுறது ? உலகளவில் பெரும் சர்சை ..!!

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி மாடல் ஒருவர் வெளியிட்ட ஹாட் பிகினி போட்டோவை போப் பிரான்சிஸ் லைக் செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

படு கவர்ச்சியாக பிரேசில் மாடல் ஒருவர் வெளியிட்ட பிகினி  புகைப்படத்தை போப் பிரான்சிஸ் “லைக்” செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் மீண்டும் மற்றொரு மாடல் ஒருவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தையும் போப் லைக் செய்துள்ள விவகாரம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.கடந்த டிசம்பர் 23ம் தேதி  மார்கோட் ஃபாக்ஸ் (Margot Foxx) என்ற மாடல் ஒருவர்தனது  ட்விட்டர் பக்கத்தில் ஸ்கிரீன் ஷாட் ஒன்றை பகிர்ந்தார்.

அந்த  ஸ்கிரீன் ஷாட்டில் போப் பிரான்சிஸின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து அவர் தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வெளியிட்ட மோசமான புகைப்படத்தை “லைக்” செய்திருந்தது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த மாதம், பிரேசிலை சேர்ந்த பிகினி மாடல் நடாலியா கரிபோட்டோவின் படத்தை போப் ‘லைக்’, செய்திருந்தது கடும் சர்ச்சையை கிளப்பியது. அதற்கு நடாலியா,  “போப் செய்த லைக் மூலம் நான் சொர்க்கத்திற்குச் செல்வேன்” என்று கிண்டலாக கூறியிருந்தார்.

https://twitter.com/margot_foxx/status/1329234363314298882

Categories

Tech |