ரஜினியின் அண்ணாத்த மற்றும் அஜித்தின் வலிமை ஆகிய படங்கள் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருபவர்கள் ரஜினி மற்றும் அஜித் . இவர்களது திரைப்படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் . அதேபோல் நடிகர் அஜித் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து தீபாவளிக்கு ரிலீசாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நடிகர் அஜித்தின் வலிமை படமும் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படமும், ரஜினியின் பேட்ட படமும் மோதிக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இதில் விஸ்வாசம் படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அண்ணாத்த, வலிமை படங்களும் மோதிக் கொள்ளுமா? என கேள்வி எழுந்துள்ளது.