நடிகர் அழகப்பன் மீண்டும் செம்பருத்தி சீரியலில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவரும் சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் கார்த்திக் ராஜ் கதாநாயகனாகவும் ஷபானா கதாநாயகியாகவும் நடித்து வந்தனர். ஆனால் சில காரணங்களால் கார்த்திக் ராஜ் செம்பருத்தி சீரியலில் இருந்து திடீரென விலகி விட்டார். மேலும் அவருக்கு பதில் அக்னி என்பவர் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
தற்போது தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் சீரியல் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் செம்பருத்தி சீரியல் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செம்பருத்தி சீரியலில் காமெடி நடிகர் அழகப்பன் மீண்டும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.