Categories
இந்திய சினிமா இந்திய சினிமா சினிமா

மீண்டும் சேரும் சமந்தா ? ட்விட் பதிவை நீக்கி…. அதிரடி முடிவு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள் …!!

நாகசைதன்யா உடனான விவாகரத்து குறித்த ட்விட்டர் இப்பதிவை நடிகை சமந்தா நீக்கியுள்ளார்.

பிரபல நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 4 ஆண்டுகள் முடிந்த நிலையில் கடந்த வருடம் 2021 அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி விவாகரத்து செய்து கொள்வதாக இருவரும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தனர். இந்த முடிவு இருவரின் ரசிகர்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நாக சைதன்யா எனக்கு ஏற்ற ஜோடி சமந்தா தான் என்றார். அதே சமையத்தில் நடிகை சமந்தாவும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்த விவாகரத்து பதிவை நீக்கியுள்ளார்.இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது இருவரும் மீண்டும் சேர்ந்து விடுவார்களோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

Categories

Tech |