Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ஜார்ஜியா செல்லும் ‘பீஸ்ட்’ படக்குழு… வெளியான புதிய தகவல்…!!!

பீஸ்ட் படக்குழு மீண்டும் ஜார்ஜியா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன், விடிவி கணேஷ், ஷைன் டாம் ஷாக்கோ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது.

Vijay's Thalapathy 65 is Beast. All you need to know about the film -  Movies News

ஆனால் அப்போது கொரோனா தொற்று அதிகமாக பரவத் தொடங்கியதால் திட்டமிட்டபடி அனைத்து காட்சிகளையும் படமாக்க முடியாமல் பீஸ்ட் படக்குழு இந்தியா திரும்பியது. இதைத் தொடர்ந்து டெல்லி, சென்னை போன்ற இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு 75% நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக பீஸ்ட் படக்குழு மீண்டும் ஜார்ஜியா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |