ரசிகர்களை கவர்ந்த ஜோடியாக உள்ள விஜய் தேவர் கொண்டா -ரஷ்மிகா மீண்டும் புதிய படத்தில் இணைய உள்ளனர்.
இளைய தலைமுறையினரின் மனதை கொள்ளை கொண்ட ஜோடியாக விஜய் தேவர் கொண்டா-ராஷ்மிகா மந்தனா இருந்து வருகின்றனர். இவர்கள் ‘டியர் காம்ரேட்’, ‘கீதாகோவிந்தம்’ படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இவர்கள் நடித்த 2படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் விதத்தில் இவர்கள் இருவரும் புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் தமிழ்,தெலுங்கு,மலையாளம் என 5 மொழிகளில் தயாரிக்கபடவுள்ளது. இப்படத்தை தெலுங்கில் பிரபல இயக்குனராக உள்ள சுகுமார் இயக்குவதாகவும் சொல்லப்படுகிறது. இவர் தற்போது அல்லு அர்ஜுனும், ராஷ்மிகாவையும் வைத்து புஷ்பா என்னும் படத்தை இயக்கி வருகிறார்.