தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு தேதிகளில் நடைபெற உள்ளது. இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற்று, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும், வெற்றி பெற்றவர்கள் அக்டோபர் 20ஆம் தேதி பதவியேற்பார்கள் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் மக்கள் நீதி மையத்திற்கு ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக டார்ச்லைட் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம் என்று மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.