Categories
அரசியல் மாநில செய்திகள்

மீண்டும் டார்ச் லைட் சின்னத்தை கைப்பற்றிய கமல்… மகிழ்ச்சியுடன் நன்றி…!!!

தமிழகத்தில் மக்கள் நீதி மையத்திற்கு மீண்டும் டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கமல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். கடந்த மாதம் ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கியது. அப்போது மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு தமிழகத்தில் டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்படவில்லை. தனக்கு டார்ச்லைட் சின்னம்தான் வேண்டும் என்று கமல்ஹாசன் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் மக்கள் நீதி மையத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளி பாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்த நாளில் இது நிகழ்ந்திருக்கிறது. இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணைநின்ற அவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார்.

Categories

Tech |