3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி மீண்டும் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் தொடர்ந்து சாலை மறியல், ரயில் மறியல் போன்றவற்றில் ஈடுபட்டனர். டெல்லியில் முகாமிட்டுள்ள விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை ஊருக்கு செல்வதில்லை என்று உறுதியாக உள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகள் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் அடுத்தகட்டமாக நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்போவதாக விவசாயிகளின் பேரணி தலைவர் ராகேஷ் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தப்படும் பேரணியில் 40 லட்சம் டிராக்டர்கள் ஈடுபடுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த பேரணியில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே நடைபெற்ற டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது குறிப்பிடதக்கது.