கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து டூரிஸ்ட் விசா விநியோகம் செய்யப்படும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் விசா வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு டூரிஸ்ட் விசா வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி வெளிநாடுகளிலிருந்து விமானங்களில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு நவம்பர் 15ஆம் தேதி முதல் டூரிஸ்ட் விசா வழங்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளை அழைத்து வரும் விமானங்கள் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.