தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்தது. இதனால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ள காடாக காட்சியளித்தது. அதுமட்டுமில்லாமல் நெற்பயிர்கள் அதிகம் சேதம் அடைந்ததால் விவசாயிகள் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் வங்கக்கடலில் புதிது புதிதாக உருவாகிவரும் காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியது. இந்த மாதம் மட்டுமே 2 காற்றழுத்த பகுதி உருவாகி வலுப்பெற்று தமிழக கரையை கடந்துவிட்டது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மாற்றமடைந்து மீண்டும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதனால் காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கை மற்றும் தென் தமிழக ஓட்டி நகர்ந்து கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த முறை தென்மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை பெயக்கூடும். மேலும் நவம்பர் 25 மற்றும் 26 தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.