ஜெயம் ரவியின் திரைப்படத்தில் பூமிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை பூமிகா ‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து சூர்யா நடிப்பில் வெளியான ”சில்லுனு ஒரு காதல்” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளிலும் நடித்து வந்தார்.
இவர் கடந்த 2007ஆம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு பிறகு அவர் நடிப்பதை நிறுத்தினார். பின் மீண்டும் தெலுங்கில் என்ட்ரி கொடுத்தார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் அறிமுகமாக இருக்கின்றார். ஜெயம் ரவி நடிக்கும் 30 வது திரைப்படத்தில் அவருக்கு சகோதரியாக நடிக்க பூமிகா ஒப்பந்தமாகி இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது.