தனுஷ் தற்போது மீண்டும் தயாரிப்பாளர் அவதாரத்தை எடுத்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் வாத்தி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மேலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இந்த நிலையில் பல திரைப்படங்களை தயாரித்து வந்த தனுஷ் இடையில் சில வருடங்களாக படங்களை தயாரிக்காமல் இருந்த நிலையில் தற்போது தான் நடிக்கும் புதிய திரைப்படங்களை தயாரிக்க இருக்கின்றாராம். அதில் பிராயர் பிரேமா காதல் திரைப்பட இயக்குனர் இயக்கும் படமும் தனுஷ் இயக்கும் திரைப்படமும் அடங்கும் என கூறப்படுகின்றது.