சீனாவில் உள்ள பெய்ஸ் நகரில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
உலகிலேயே சீனாவில் தான் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உலகில் பெரும்பாலான நாடுகளில் இந்த வைரஸ் பரவத்தொடங்கியது. மேலும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்கவிருக்கும் நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையயில் சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள பெய்ஸ் நகரில் திடீரென்று கொரோனா,ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கியது. மேலும் பெய்ஸ் நகரில் நேற்று மட்டும் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அதில் இரண்டு பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பெய்ஸ் நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அத்தியாவசிய மற்ற கடைகளை மூடவும், வாகனங்கள் செல்வதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.