Categories
தேசிய செய்திகள்

மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராயம்…. 18 பேர் பலி; 20 பேர் கவலைக்கிடம்…. ஷாக்…..!!!!

பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ள சாராயம் குடித்து 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் ஒட்டியுள்ள கிராமத்தில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. தந்துபா தாலுகாவை சேர்ந்த கிராமங்களில் இருந்து கூலி தொழிலாளர்கள் போடாட் மாவட்டம் nabhoi கிராமத்திற்கு சாராயம் குடிக்க சென்றுள்ளனர்.

குடித்த ஒரு மணி நேரத்தில் பலருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டு சொந்த வீடுகளில் சுருண்டு விழுந்து மரணம் அடைந்தனர். உயிருக்கு போராடியவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருபதுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கூலி தொழிலாளர்கள் குடித்த நாட்டு சாராயத்தில் ஏதேனும் வேதிப்பொருள் கலக்கப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.கள்ள சாராயத்திற்கு குஜராத்தில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |