தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு கொரோனா காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்தது. இதனால் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்த நிலையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இவ்வாறு தமிழகத்தில் கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா முடிந்துவிட்டது இனி நமக்கு வராது என்ற எண்ணத்தை மாற்றி உரிய கட்டுப்பாடுகளோடு இல்லாவிட்டால் அது மீண்டும் தலைதூக்கும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். மேலும் கவனக்குறைவாக இருந்து மீண்டும் இதனை பெரிய அளவில் முன்னேற விடாமல் தடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.