Categories
தேசிய செய்திகள்

மீண்டும் தலைதூக்கும் ஹிஜாப் விவகாரம்….. 24 மாணவிகள் இடைநீக்கம்…. கல்லூரி நிர்வாகங்களின் அதிரடி அறிவிப்பு….!!!

மாணவிகள் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ஹிஜாப் விவகாரம் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது. இதனால் மாநில அரசும், கர்நாடக உயர்நீதிமன்றமும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மத அடையாள ஆடைகளை மாணவ-மாணவிகள் அணியக்கூடாது என உத்தரவிட்டனர். இதை எதிர்த்து பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. இந்நிலையில் ஹிஜாப் விவகாரம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. அதாவது கர்நாடக மாநிலம் புத்தூர் தாலுகா உப்பினங்குடியில் ஒரு கல்லூரி அமைந்துள்ளது.

இந்த கல்லூரியில் 24 மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர். இதனால் 24 மாணவிகளும் ஒரு வாரம் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்பிறகு பல மாணவிகள்  ஹிஜாப் அனுமதிக்கப்பட்ட கல்லூரிகளில் சேர்வதற்காக கல்வி நிறுவனங்களிலிருந்து மாற்று சான்றிதழ்கள் வேண்டும் என விண்ணப்பித்துள்ளனர். மேலும் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரவிருக்கும் மாணவிகள் மாற்றுச் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் எனவும் கல்வி நிர்வாகங்கள் அறிரிவித்துள்ளது.

Categories

Tech |