சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 239 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகின் முதன் முதலில் கொரோனா தொற்று சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்த நிலையில் சீனா கட்டுக்குள் வந்துவிட்டது. இந்நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தலை காட்டத் துவங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக அங்கு தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 249 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்புகள் மூலம் சீனாவில் இதுவரை கொரோனோவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 1,09,092 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு கொரோனோவால் புதிய உயிரிழப்புகள் ஏற்படவில்லை. சீனாவில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4636 ஆக உள்ளது.