சின்ன கலைவாணர் என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட நடிகர் விவேக் ஏப்ரல் மாதம் 17 ம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது இந்த திடீர் மரணம், அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சி அடைய வைத்தது. விவேக் உயிரிழந்த சமயத்தில் அவர் பல படங்களில் நடிக்க கமிட்டாகி இருந்தார்.
அதன்படி லெஜெண்ட் சரவணா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் மரணம் அடைந்தார். இந்நிலையில் தற்போது படம் முழுக்க விவேக் போலவே தோற்றமுள்ள நபரை நடிக்க வைத்து மார்பிங் மூலம் மீண்டும் நடிகர் விவேக்கை திரையில் கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.