குழந்தைகளுக்காக குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் படம் சாட் பூட் த்ரீ. இதில் சினேகா, வெங்கட் பிரபு, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரசன்னா, சினேகா நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திகில் படத்தின் மூலம் இயக்குனரானவர் அருணாச்சலம் வைத்தியநாதன்.
இப்போது இவர் தனது அடுத்த படமான சாட் பூட் த்ரீ என்ற படத்தை தயாரித்து இயக்கி வருகிறார். இப்படத்தில் 4 குழந்தைகளின் சுற்றி கதை பின்னப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான திரைப்படமாக இருந்தாலும் இந்த படம் அனைத்து தரப்பினரையும் கவரும் என டைரக்டர் அருணாச்சலம் வைத்தியநாதன் தெரிவித்தார்.