Categories
தேசிய செய்திகள்

“மீண்டும் திறக்கப்படும் பள்ளிகள்?”…. மத்திய அரசு முக்கிய ஆலோசனை…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி இந்தியாவிலும் கால் பதித்த ஒமிக்ரான் வைரஸால் நாடு முழுவதும் கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் சில பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்புகள் தொடர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பெற்றோர்களின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு மீண்டும் பள்ளிகளை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. எனவே மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் டெல்லியில் பள்ளிகள் திறப்பு பற்றி அடுத்த வாரம் முடிவு எடுக்க உள்ளது. இருப்பினும் தமிழகத்தில் மட்டும் பள்ளிகள் வருகின்ற பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |