தெற்காசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை கைவிடக் கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தெற்காசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இன்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கைவிடகூடாது என மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,“ பரிசோதனை, தடம் கண்டறிதல், சிகிச்சை அளித்தல், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுதல், தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் ஆகிய 5 தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து தீவிரமாக பின்பற்ற வேண்டும்.
பரிசோதனைகளை குறைக்கக்கூடாது. தேவையான அளவில் தொடர்ந்து பரிசோதனைகளை மேற்கொண்டு புதிய வகை கொரோனா பரவுவதை உரிய நேரத்தில் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் மக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும்.