தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,27,532 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று சுனாமி அலை போல் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. அங்கு ஒரு நாளில் 3, 27, 532 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகள் 55,39,650 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சியோலில் 66,859 பேருக்கும், இன்சியான் நகரில் 21,974 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வந்த 59 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தீவிர நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,113 ஆகும்.இது முந்தைய நாளை விட 26 அதிகமாகும். 206 பேர் ஒரு நாளில் பலியாகி இருக்கின்றனர். இதுவரை கொரானாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,646 ஆகும். இறப்பு விகிதம் 0.7 சதவீதம் தான் என்பது ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.