சீனாவில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கிய வருடாந்திர தேசிய தின விடுமுறை ஒரு வார காலம் நீடித்து இருக்கிறது. அப்போதும் கொரோனாவை காரணம் காட்டி அதிகாரிகள் பொதுமக்களை தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டும் என கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றனர். இந்த சூழலில் சீனாவில் பல நகரங்களில் புதிய ஊரடங்கு மற்றும் பயண கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஒரு வார கால விடுமுறையின் போது தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.
மேலும் அடுத்த வாரம் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கின்ற நிலையில் கட்டுப்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாங்சி மாகாணத்தின் பென்யாங் நகரத்தில் இன்று முதல் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஜோஹோர் நகரில் கடந்த 12 தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000க்கும் மேல் அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் அங்கும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஷாங்காய் மாகாணத்தில் சில மாவட்டங்கள் இன்று முதல் திரையரங்குகள் மற்றும் பிற பொழுதுபோக்கு இடங்களை மூடுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பீஜிங் மற்றும் பிற நகரங்களில் பூங்காக்கள் அலுவலக கட்டிடங்கள் கடைகள் மற்றும் பிற பொது இடங்களுக்குள் பொதுமக்கள் நுழையை 72 மணி நேரம் முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்ற நடைமுறை இன்னும் அமலில் இருக்கிறது. கொரோனா இல்லை என்றால் மட்டுமே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றார்கள். மேலும் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டம் நிறைவடைந்த பின் இந்த கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.