நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஏப்ரல் 19ஆம் தேதி முதலே ஊரடங்கு அமலில் உள்ளது.
இதனால் தற்போது பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த தளர்வுகளில் விதிமுறைகளை மக்கள் தீவிரமாக பின்பற்ற வேண்டும். விதிமுறைகளை மீறினால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.