Categories
மாநில செய்திகள்

மீண்டும் துண்டாகும் அதிமுக…. திக்கு முக்காடும் ஓபிஎஸ்-ஈபிஎஸ்…. நடக்கப்போவது என்ன?….!!!!

ஜெயலலிதா அம்மா இருக்கும் வரையிலும் அதிமுகவில் முக்குலத்தோர் சமுதாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. அதற்கு முக்கியமான காரணம் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த சசிகலா வகையறாக்கள் ஜெயலலிதா உடன் நெருக்கமாக இருந்ததே ஆகும். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க-விலிருந்து சசிகலா ஓரங்கட்டப்பட்டதும் முக்குலத்தோர் சமுதாயத்துக்கு முக்கியத்துவம் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. சென்ற சட்டமன்றத் தேர்தலின்போது வன்னியர் சமுதாயத்திற்கு வழங்கிய 10.5 % இடஒதுக்கீடு, தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் தொடர்பாக அதிமுக அரசு வெளியிட்ட அரசாணையால் தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் சமுதாய அதிருப்தியால் ஏராளமான தொகுதிகளில் அதிமுக தோல்வியை தழுவியது.

அதுமட்டுமல்லாமல் ஆட்சி மாற்றத்திற்கு பின் அதிமுகவில் இருந்த முக்குலத்தோர் சமுதாயத்தினர் திமுக மற்றும் பாஜக பக்கம் நகரதொடங்கினர். கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க வலுவாக இருந்தாலும் தென்மாவட்டங்களில் வாக்கு வங்கி குறையத் தொடங்கியது. முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த ஓ.பி.எ.ஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகயிருந்து வந்த போதிலும் இன்னும் அதிகமான முக்கியத்துவம் வேண்டுமென்று எதிர்பார்க்கின்றனர். அதற்கேற்றார் போன்று ஜூன் மாதம் நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் அடிப்படையில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை சனிக்கிழமை திருநெல்வேலியில் நடந்த இசக்கி சுப்பையா இல்ல விழாவில் பங்கேற்ற ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடம் தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் சென்ற 2016 ஆம் வருடம் நடந்த மாநிலங்களவை தேர்தலில் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்த்திற்கு ஜெயலலிதா பதவி வழங்கிய பின் தற்போதைய தலைமை வழங்கவில்லை என்ற விவரத்தையும் எடுத்து கூறியுள்ளனர். கட்சியில் உள்ள முக்குலத்தோர் சமுதாய நிர்வாகிகள் கூறிய கருத்தை பரிசீலனை செய்வதாக அதிமுக தலைமை தெரிவித்து இருப்பதாக தெரிய வருகிறது. முன்பே முக்குலத்தோர் சமுதாயத்தினர் சசிகலா, டிடிவி தினகரன் பக்கம் போகாமல் தடுத்து வைத்திருந்த சூழ்நிலையில் இந்த மாநிலங்களவை தேர்தலில் முக்குலத்தோருக்கான முக்கியத்துவம் இல்லையெனில் திமுக, பாஜக பக்கம் சிறகடித்து பறக்க தயாராகி விட்டதாகவும் தகவல் தெரியவருகிறது. கொங்கு மண்டலத்தை கைக்குள் வைத்துள்ள அதிமுக தலைமை, முக்குலத்தோர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தென்மண்டலத்தையும் தன்வசம் வைத்திருக்குமா என்பது ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்பை பொறுத்து இருக்கும் என்று அதிமுகவினர் கூறுகின்றனர். இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் முக்குலத்தோர் கோரிக்கையை அதிமுக தலைமை ஏற்றுக்கொள்ளகூடிய கட்டாயமும் இருந்து வருகிறது.

Categories

Tech |