அமெரிக்காவில் நரகத்திற்கான வழி என்றழைக்கப்படும் 72 அடி அகல நீர்ச்சுழி மீண்டும் தெரிய தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். அதாவது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெர்ரியெஸ்சா என்ற ஏரியில் குளோரி ஹோல் என்ற பெயரில் அமைந்துள்ள 72 அடி அகல நீர்ச்சுழி மீண்டும் தெரிய தொடங்கியுள்ளது.
ஏரியின் நீர்மட்டம் 15.5 அடிக்கு மேலே செல்லும் போது நீர்ச்சுழியானது தெரிய தொடங்குகிறது. இந்த 245 அடி நீளம் கொண்ட சுரங்க வழியானது 1 வினாடிக்கு 48,000 கன அடி நீரை உள்வாங்கி கொள்கிறது.