Categories
மாநில செய்திகள்

மீண்டும் தொடங்கப்படும் மூத்த குடிமக்களுக்கான ரயில் சலுகை…? வெளியான மிக முக்கிய தகவல்…!!!!!

கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட பிறவகை பயணிகளுக்கு ரயில் டிக்கெட் கட்டணத்தில் வழங்கப்பட்ட சலுகையை மீண்டும் தொடங்குவதற்கு இந்திய ரயில்வே திட்டமிட்டு இருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக தொடர்ந்து விமர்சனங்களும் கோரிக்கைகளும் எழுந்த பிறகு மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை மீண்டும் வழங்குவது பற்றி ரயில்வே பரிசீலனை செய்து வருகிறது. ஆனால் அது பொது மற்றும் ஸ்லீப்பர் பிரிவினருக்கு மட்டுமே இருக்க வாய்ப்பு இருக்கிறது மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் கட்டணத்தில் சலுகை தொடர்பாக வயது அளவுகோல் போன்ற விதிமுறைகளும் நிபந்தனைகளும் அரசாங்கம் மாற்றி அமைக்கலாம் என்ற தகவல்களும் தெரிவிக்கிறது.

இந்த நிலையில் 58 வயது பெண்களுக்கும் 60 வயது ஆண்களுக்கும் இந்த கட்டண சலுகை வசதியை 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அரசு வழங்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. ரயில் கட்டணத்தில் முன்னதாக வழங்கப்பட்ட சலுகை 2020 மார்ச் மாதத்திற்கு முன் மூத்த குடிமக்களை பொறுத்தவரையில் அனைத்து வகுப்புகளிலும் பயணிக்க பெண்களுக்கு 50 சதவீதமும் ஆண்களுக்கு 40% தள்ளுபடி ரயில்வே வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும். ரயில்வேயில் இருந்து இந்த சலுகைகளை பெறுவதற்கான குறைந்தபட்ச வரம்பு வயதான பெண்களுக்கு 58 ஆகும் ஆண்களுக்கு 60 ஆகவும் இருந்தது. ஆனால் கொரோனா காலகட்டத்திற்கு பின் அவர்களுக்கு இருந்த அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் இது தொடர்பான வெளியான தகவல்களில் இந்த சலுகைகள் முதியவர்களுக்கு மிகவும் உதவுகிறது என்பதை அரசு புரிந்து கொண்டுள்ளது எனவும் அதிலும் முற்றிலுமாக அகற்ற போகின்றோம் என அரசு ஒருபோதும் தெரிவிக்கவில்லை என இது பற்றி பரிசீலனை செய்து முடிவெடுக்கப்படும் என கூறப்பட்டிருக்கிறது. மூத்த குடிமக்களுக்கான சலுகைகளுக்கான வயது வரம்புகளை மாற்றி 70 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்க ரயில்வே வாரியம் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் அறிந்து வட்டாரங்கள் கூறுகிறது. இந்த நிலையில் 2020 ஆம் வருடம் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலுக்கு முன்பு  மூத்த குடிமக்கள் சலுகை பெறுவதற்கான வயது பெண்களுக்கு 58 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள் எனவும் ஆண்களுக்கு 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் எனவும் இருந்தது. பெண்கள் 50 சதவிகித கட்டண சலுகையும் ஆண்கள் மற்றும் திருநங்கைகள் உட்பட பிற பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு 40% கட்டண சலுகை வழங்கப்பட்டது அனைத்து ரயில்களிலும் பிரீமியம் தட்கல் திட்டத்தை அறிமுகப்படுத்துவது பற்றியும் ரயில்வே பரிசோதனை செய்து வருகிறது.

Categories

Tech |