Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் தொடங்கியது வலிமை அப்டேட்…. ரசிகர்கள் மகிழ்ச்சி…!!!

கொரோனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்ட வலிமை படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அதன்பின் கடைசி கட்டமாக சில சண்டை காட்சிகள் படமாக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கு மத்தியில் ரசிகர்கள் வலிமை அப்டேட் எப்போது என்று அரசியல் கட்சியினர் முதல் கிரிக்கெட் பிரபலங்கள் வரை அனைவரிடமும் கேட்டு தொந்தரவு செய்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி செய்தியாக படப்பிடிப்பு முடிந்த பிறகு வலிமை படத்தின் பெரிய அப்டேட் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |