ஸ்பெயினில் மீண்டும் தொடங்கிய காளை பந்தயத்தில் முதல் நாளன்று மூன்று பேர் காயமடைந்தனர்.
ஸ்பெயின் நாட்டில் பம்ப்லோனா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் காளை பந்தயம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக இந்த காளை பந்தயம் நடைபெறவில்லை. தற்போது மீண்டும் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு குறுகிய வீதியில் ஓடிய காளைகளை வெள்ளை உடை அணிந்தவர்கள் துரத்தி சென்றனர். சுமார் 800 கிலோமீட்டர் ஓடிய காளைகள் போட்டி நடைபெறும் மைதானத்திற்குள் நுழைந்தது. மேலும் நேற்று முதல் நாள் நடைபெற்ற பந்தயத்தின் போது மூன்று பேர் படுகாயமடைந்தனர்.