கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாணிக் காயிதம் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது அண்ணாத்த, சாணிக் காயிதம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படத்தில் இயக்குனர் செல்வராகவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
Our @KeerthyOfficial Back to shoot For #saanikaayidham 💥❤ #KeerthySuresh @KeerthyOfficial pic.twitter.com/FxsA25vqTt
— Trends Keerthy (@TrendsKeerthy) June 29, 2021
இதையடுத்து கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது . தற்போது மீண்டும் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மீண்டும் சாணிக் காயிதம் படத்தின் படப்பிடிப்புக்கு கிளம்பியுள்ளதாக பதிவிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது