இரண்டு வருடங்களுக்குப் பின் புதுச்சேரி, திருப்பதி இடையேயான ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலை, வேலூர், வழித்தடம் புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி வழியாக திருப்பதிக்கு பயணிகள் இயக்கப்பட்டு வந்தது. இதுதவிர புதுச்சேரியில் இருந்து சென்னை மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த 2020 மார்ச் மாதம் ரயில் சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டது.
அதன்பின் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்க அரசு அனுமதி வழங்கியது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் 99 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது. இதன் காரணமாக கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகமும் பயணிகளுக்கு விதித்திருந்த கட்டுபாடுகளை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வந்த முக்கிய ரயில் பயணிகள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து ஏப்ரல் ஒன்றாம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு புறப்பட்ட பயணிகள் ரயில் பிற்பகல் 12:30 மணிக்கு புதுவை வந்தடைந்தது. இந்த ரயில் மறுமார்க்கத்தில் பிற்பகல் 2:55 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, திருமால்பூர், காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி வழியாக இரவு 11 மணிக்கு திருப்பதி ரயில் நிலையத்தை சென்றடைந்தது.
12 பெட்டிகளை கொண்ட இந்த ரயில் முற்றிலும் முன்பதிவு இல்லாத ரயில், சுமார் ஆயிரம் பேர் பயணம் செய்யலாம். புதுச்சேரி,திருப்பதி ரூ.109 என்ற குறைந்த கட்டணம் என்பதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான திருப்பதி பக்தர்களும், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்ட ரயில் பயணிகளுக்கு இந்த ரயில் பெரிதும் உதவும் வகையில் இருப்பதாக பயணிகள் கூறியுள்ளார்.