இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் – 2’ திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் -2 ‘ திரைப்படம் உருவாகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியபோது இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தி அளிக்கவில்லை என படப்பிடிப்பை நிறுத்தி வைத்தார். அதன்பிறகு தொடங்கப்பட்ட படப்பிடிப்பின் போது எதிர்பாராதவிதமாக கிரேன் சரிந்து உயிரிழப்பு ஏற்பட்டது. பின்னர் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து படத்திலிருந்து விலகுவதாக இயக்குனர் ஷங்கர் தயாரிப்பு நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியதாக கூறினார் . ஆனால் இதனை பட நிறுவனம் மறுத்தது . இப்படி தொடர்ந்து பல்வேறு தடைகள் இந்தியன்-2 படப்பிடிப்பிற்கு ஏற்பட்டது. இந்நிலையில் அடுத்த மாதம் இந்தியன்-2 படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே தற்போது கமல்ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ என்ற திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.